#Breaking கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

 
tn

சுதந்திர போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102.

tn

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் – தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தலைவரும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுப்பினருமான என்.சங்கரய்யா இன்று தனது 101 ஆவது  பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதைத் தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக,  பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளராக பல்வேறு  பரிமாணங்களை கொண்டவர் சங்கரய்யா. 8 ஆண்டு சிறை, 3 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 பேரில் ஒருவர், 3 முறை சட்டமன்ற உறுப்பினர் என மக்களுக்காக அரும்பாடுபட்டவர். 

“சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்” மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இந்த சூழலில் தகைசால் தமிழர் சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று காலமானார்.உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.