தவெக கரை வேட்டியுடன் செங்கோட்டையன்... சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படம்...

 
1 1

விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். விஜய்யை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். காலை முதலே தொண்டர்கள் பொதுக்கூட்ட இடத்தில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்துடனும், தவெக கரை வேட்டியுடன் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த மாதம் விஜய் கட்சியில் செங்கோட்டையன் சேர்ந்தபோது “இது ஜனநாயக கட்சி (த.வெ.க.). யார் வேண்டுமானாலும், தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுடைய படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொள்வதற்கு ஆட்சேபனை கிடையாது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.