அரசியலில் பரபரப்பு திருப்பம்- நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன், சீமான்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் நிலவரம் குறித்து சீமான், நிர்மலா சீதாராமனிடம் பேசியதாக தெரிகிறது.
இதேபோல் ஏற்கனவே டெல்லி சென்றபோது நிர்மலா சீதாராமனை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்த நிலையில், இன்று மீண்டும் சென்னையில் தங்கியுள்ள நிர்மலா சீதாராமனை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியுள்ளார். கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் அடுத்தடுத்து சந்தித்து தனியாக ஆலோசனை நடத்துவதால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.