“எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆலோசனை வழங்கலாம்”- அமைச்சர் செங்கோட்டையன்
தி.மு.க ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே கொடுத்தார்களா..? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "ஒவ்வொருவரும் தங்களுக்குத் தகுந்தாற்போல் கருத்துகளைக் கூறுவது வழக்கம்தான். அதிமுக ஆட்சிக் காலத்தில் என்னென்ன நடைபெற்றது என்பதை எங்களாலும் சுட்டிக்காட்ட முடியும். எதிர்க்கட்சி என்ற முறையில் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டுமே தவிர, பல்வேறு கருத்துகளைச் சொல்வது எதிர்க்கட்சிக்கு அழகாக இருக்காது. தமிழ்நாட்டில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமோ, அவை அனைத்தையும் விரைந்து செயல்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
மகளிர் உதவித்தொகையாக 2,500 ரூபாய் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் விஜய் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் அறிவித்த அடுத்த நாளே திட்டங்கள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது..! சென்னையில் 31 செ.மீ மழை பெய்த போதும் 4 மணி நேரத்தில் மக்கள் சகஜமான வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.. தீபாவளிக்கு பிறகு கூடுதல் மழை பொழிய இருக்கிறது.. அதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்" என்றார்.

