உதயநிதியை கைது செய்தது சரிதான் என்பதே மக்களின் மனநிலை- செங்கோட்டையன்
Aug 4, 2026, 20:55 IST1785857111071
உதயநிதி கைது நடவடிக்கை நியாயமானது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பனையூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “பெண்களை இழிவுப்படுத்துவதை ஏற்க முடியாது. உதயநிதியை கைது செய்தது சரிதான். கைது செய்தது சரி என்பது தான் மக்களின் மனநிலை. இதுபோன்ற தவறை இனிமேல் யாரும் செய்யக்கூடாது. விஜய் ஏன் இந்தியாவை ஆளக்கூடாது என்ற அளவிற்கு மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்..ஏன் உங்கள் முதலமைச்சரை போல மற்ற முதலமைச்சர்கள் இல்லை? என கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அவர்கள் மட்டுமே முதலமைச்சர்களாக இருந்தனர். விஜய் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர். நாளைக்கே தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் நாம் தான் வெல்வோம். வேறு எவனாலும் வரமுடியாது” என்றார்.

