எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார்- செங்கோட்டையன் பரபரப்பு
குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில்சொல்ல வேண்டுமென்று Syllabus-ல் வேறு பொருள்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா?. எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவலை தவறு. தங்களின் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார்.
இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்” என்றார்.

