"நாளை முதல்வர் பதிலளிப்பார்"- செங்கோட்டையன்
Jun 22, 2026, 19:55 IST1782138340000
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து, நாளை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சரி செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதற்கான புள்ளி விவரங்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் நாளை உரிய விளக்கம் அளிப்பார். சட்டப்பேரவை நிகழ்வு முழு நேரலையில் ஒளிபரப்பாகி உள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் இருந்தது.. அது இப்போ மாறியிருக்கிறது.. முழுமையாக பேசி முடித்த பின்னர் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்” என்றார்.

