“மக்களால் நிராகரிக்கப்பட்ட ஸ்டாலின் எங்களை விமர்சிப்பதற்கு பதில் அவருடைய கட்சியை வளர்ப்பதற்கான வழியை பார்க்கலாம்”- செங்கோட்டையன்

 
“மக்களால் நிராகரிக்கப்பட்ட ஸ்டாலின் எங்களை விமர்சிப்பதற்கு பதில் அவருடைய கட்சியை வளர்ப்பதற்கான வழியை பார்க்கலாம்”- செங்கோட்டையன்

திமுக தலைவர் ஸ்டாலின் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அதிகமாக பேசக்கூடாது. மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அவர், எங்களை விமர்சிப்பதற்கு பதில், அவருடைய கட்சியை வளர்ப்பதற்கான வழியை பார்க்கலாம். மக்களால் தூக்கி எறியப்பட்ட ஸ்டாலின் அவர்கள் எல்லாம் இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார், அதான் வேதனையாக உள்ளது. நம்முடைய சின்னம் எடப்பாடி தொகுதியில் நின்று இருந்தால்  எடப்பாடி பழனிச்சாமி அவர்களும்  இன்றைக்கு போயிருப்பார். தமிழகத்தில் கொள்ளை பேரம் நடந்து கொண்டிருக்கிறது, திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஒரு ஆட்சியை கொண்டு வரலாம் என்று சொன்னால் அதை தகர்த்தெறியக்கூடிய சட்டி நம்முடைய முதலமைச்சர் விஜய் அவர்களிடம் உள்ளது. 

சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரும்பான்மை பெற்ற நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து சதித்திட்டம் தீட்டியது யார்? என ஸ்டாலின் கூற வேண்டும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில், மேலும் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் இணைவார்கள். அதிமுக என்பது மூழ்கி கொண்டிருக்கும் கப்பல். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் புரட்சித் தலைவர் படமில்லை, அம்மா படமில்லை, தன்னுடைய படத்தை மட்டும் போட்டு புகழ்பாடியவர் எடப்பாடி பழனிசாமி. இதை சுட்டிக்காட்டி பேசிய காரணத்தால்தான் எனக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. அவரை அமைச்சராக்கியவரைக் கூட மறந்தவர் இவர். அதனால்தான் அவர் இன்று தேய்ந்து கொண்டு இருக்கிறார். அந்தக் கட்சியிலிருந்து இங்கு வருகிறார்கள்; இனி கட்சியே இருக்காது. அதிமுக என்னும் மூழ்கும் கப்பலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இன்னும் அந்தக் கட்சியின் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள்” என்றார்.