மின்வெட்டு பிரச்னை ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலும் மின்வெட்டு பிரச்சனை இருந்திருக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு எத்தனை மணிக்கு வருவார்னு தெரியும், இதையெல்லாம் அவர் சொல்லக் கூடாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலும் மின்வெட்டு பிரச்சனை இருந்திருக்கிறது. வெயில் காலம் என்பதால் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது. கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும்போது உபகரணங்களும், கட்டுமான பணிகளும் தேவை. திமுக ஆட்சியில் மொத்தமாகவே அதற்கு ரூ.627 கோடி மட்டும்தான் செலவு செய்துள்ளார்கள். திமுக ஆட்சியில் மின்சார பகிர்மானத்திற்கான வேலைகளை செய்யவே இல்லை. சென்னையிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் எந்தவொரு வளர்ச்சி பணியும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் போதைப்பொருட்கள் கட்டுப்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலத்தில் தவெக பிரமுகர் மீதான பாலியல் புகார் குறித்து செய்திகளை மட்டும் வைத்து கருத்து கூறமுடியாது. உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் உறுதியானால் முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

