இனி வருமான, இருப்பிட சான்றிதழ் பள்ளிகளிலேயே வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

 
ந்ச்

ஒரு வார காலத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் முருகானந்தம், உள்ளிட்ட துறை ரீதியிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வெப்பநிலை மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், மக்களுக்கு அறிவுரை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பருவமழை தொடங்க உள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறி அமைச்சர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் துறை சார்பாக அனைவரும் இணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறிய அமைச்சர், அனைவரும் பாராட்டும் வகையில் துறையை எடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மின்சார துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியும், முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்படாமல் இருக்கின்றது என்பதை தொடர்பான கேள்விக்கு, இன்னும் ஒரு வார காலத்திற்குள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும், 12ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும். வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக நிதியை பொறுத்தவரை துரை ரீதியாக அவற்றினை செயல்படுத்தும் பொழுது குறைபாடுகள் இருக்காது என்று கூறிய அமைச்சர், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதே முதலமைச்சரின் கனவு என்றும் தெரிவித்தார்