ஓபிஎஸ், டிடிவி குறித்து மனம் திறந்த செங்கோட்டையன்..!

 
1 1
தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர்.

ஓபிஎஸ் அணி தவெகவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவரது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம்  (டிச.23) நடத்திய ஆலோசனையின்போது தேர்தல் கூட்டணி குறித்து பெரும்பாலோர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.அதனடிப்படையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய போவதில்லை என்றும், துரோகத்திற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனவே அவர் விரைவில் நல்ல முடிவுகளை மேற்கொள்வார்" என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சியுடன் தவெக இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு , அதுபோன்ற கருத்துகள் இல்லை என்று கூறிய அவர், இணைய வேண்டிய இடத்தில் இணைவோம் என தெரிவித்தார். தன்னை பொறுத்த வரையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் இருந்து சிலர் வருவார்களா என கேட்டால் வருவார்கள் எனக் கூறிய அவர், பாஜகவை கொள்கைரீதியாக எதிர்க்கின்றோம் என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்