#BREAKING விஜயுடன் செங்கோட்டையன் சந்திப்பு
Updated: Nov 26, 2025, 17:24 IST1764158040403
இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில், தவெக தலைவர் விஜயுடன் சந்தித்தார்.

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் மூத்த தலைவரும், 50 ஆண்டு கால அதிமுக உறுப்பினருமான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.


