செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு - கலாய்த்த செல்லூர் ராஜு..!

 
1 1

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது செங்கோட்டையன் எங்களுடன் தானே இருந்தார். தூத்துக்குடி சம்பவத்தின் போது செங்கோட்டையன் மாங்கா பறிக்கச் சென்றாரா?, செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு. வேறு யாரும் ஏற்றுக்கொள்ளததால் தவெகவில் சேர்ந்துள்ளார். அவருடைய பேச்சை நீங்கள் தான் பெரிதா எடுத்துக் கொள்கிறீர்கள்.


இன்னும் ஒரு சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீறக திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகும் திட்டம். திட்டம் பயனில்லாமல் உள்ளது. 

முதல்வருக்கு பயம் வந்துவிட்டது. பாஜக, அதிமுக ஆதரவு பெருகிக்கொண்டே இருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. திமுக அரசைவிட பன்மடங்கு சிறந்த நிர்வாகி எடப்பாடி பழனிசாமி. கருத்துக்கணிப்பை பார்க்கும்போது முதல்வருக்கு பயம் வந்துவிட்டது. முதல்வர் திமுக தோழமைக் கட்சிகளை அடிமையாக வைத்திருக்கிறார். திமுக கூட்டணி வைத்தால் நட்பு ரீதியில் நாங்கள் கூட்டணி வைத்தால் அடிமை ரீதியாகவா? அவர்கள் கூட்டணிக்குள் கொள்கை முரண்பாடு உள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது முதல்வருக்கு பதற்றம் வந்துவிட்டது.

பட்ஜெட்  சிலருக்கு கசக்கும், சிலருக்கு புளிக்கும், சிலருக்கு இனிக்கும். ஒன்பதாவது முறையாக பெண் பட்ஜெட்டை சமர்ப்பிப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. கைத்தறி ஆடையை உடுத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். எங்கள் ஆட்சிக் காலத்தில் 17 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். எய்ம்ஸ் முதல் கட்டடம் திறக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் குறித்து மக்கள் மத்தியில் புரிதல் இல்லை. மத்திய அரசு கொடுக்க மறுக்கவில்லை ஆனால் தமிழக அரசு முறையான ஒரு வழிகாட்டு முறையை பின்பற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.