செம்மொழிப்பூங்காவில் பிப். 10ஆம் தேதி மலர் கண்காட்சி

 
tn

செம்மொழிப் பூங்கா சென்னை நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பூங்கா. இது சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான  இடத்தில்  ரூ.8 கோடி செலவில் செம்மொழிப் பூங்காவை அமைத்துள்ளது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

tn

முளரிப்பூ(உரோசா), மல்லிகை, செண்பகம், பாரிஜாதம், பவளமல்லிகை போன்ற வாசனை மிக்க மலர்களைத் தரும் தாவரங்கள் அடங்கிய நறுமணத் தோட்டம், துளசி, வசம்பு, குப்பைமேனி, இன்சுலின் செடி முதலான தாவரங்கள் நிரம்பிய மூலிகைத் தோட்டம், போன்சாய் முறையில் வளர்க்கப்பட்ட ஆல், அரசு, மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, எலுமிச்சை மரங்கள் கொண்ட போன்சாய் தோட்டம், மஞ்சள் மலர்களையும், மஞ்சள் செடிகளையும் உள்ளடக்கிய மஞ்சள் பூங்கா, விதவிதமான மூங்கில் மரங்கள் நிரம்பிய மூங்கில் பூங்கா, பலவிதமான பட்டாம் பூச்சிகள் ஓடியாடும் பட்டாம்பூச்சிப் பூங்கா என 10 விதமான சிறுபூங்காக்கள் செம்மொழிப் பூங்காவில் இடம்பெற்றுள்ளன.

tn

இந்நிலையில் செம்மொழிப்பூங்காவில் பிப். 10ஆம் தேதி மலர் கண்காட்சி சென்னையில் 3-ஆவது முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.  கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் பிப்.10ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது.