செம்ப்கார்ப், கேப்பிட்டா லேண்ட் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று  சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அவரை  டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  சுதர்சன் வேணு மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

tn

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்  சஞ்சீவ் தாஸ்குப்தா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.  அத்துடன் சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க்கை  சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்துஆலோசனை மேற்கொண்டார். 

tn

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததுடன் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். 


அத்துடன் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.  அதேபோல் சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வலியுறுத்தினார்.