இது ஏன் மோடிக்கு தெரியவில்லை?- செல்வப்பெருந்தகை

 
selvaperunthagai

காந்தி திரைப்படம் 1982ம் ஆண்டு வருவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் டேவிஸ்டாக் சதுக்கத்தின் நடுவில் காந்தியடிகளின் நூற்றாண்டு பிறந்தநாளின் போது 1968ம் ஆண்டு அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கிலாந்து சென்ற போது எனக்கு தெரிந்தது. இது ஏன் மோடிக்கு தெரியவில்லை? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

Image


இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்ட்ர் பூங்காவில் இரண்டாம் உலகப்போரின் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில் சிலைக்கு அருகில் பாராளுமன்ற கட்டிடத்தின் முகப்பை நோக்கிய வண்ணம் மகாத்மா காந்தியடிகளின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. என் மகளின் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்த வேளையில் நேற்று (30.05.2024) வெஸ்ட் மினிஸ்டர் பூங்காவில் இருக்கும் காந்தியடிகளின் சிலைக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினேன்.

மேலும், காந்தி திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வருவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் டேவிஸ்டாக் சதுக்கத்தின் நடுவில் காந்தியடிகளின் நூற்றாண்டு பிறந்தநாளின் போது 1968 ஆம் ஆண்டு அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கிலாந்து சென்ற போது எனக்கு தெரிந்தது. இது ஏன் மோடிக்கு தெரியவில்லை ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.