“கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை”- செல்வப்பெருந்தகை
Apr 2, 2025, 17:58 IST1743596939170

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டு கொடுத்தது சரிதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்! காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது. வெறும் 282 ஏக்கர் நீர் இல்லாத அந்த வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்று கொடுத்தவர் இந்திராகாந்தி. கச்சத்தீவு விவகாரத்தில் இந்திரா காந்தி தவறு செய்துவிட்டதாக பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இ.பி.எஸ். புரிந்து கொள்ள வேண்டும். இப்போது மீனவர்கள் தங்களது உரிமை வேண்டும் என சொல்கிறார்கள். அதற்காக அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்” என்றார்.