கே.வீ.தங்கபாலுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது - செல்வப்பெருந்தகை வரவேற்பு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திரு.கே.வீ.தங்கபாலு அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படதற்கு செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திரு.கே.வீ.தங்கபாலு அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியறிந்து மிகுந்த மனமகிழ்ச்சியடைந்தேன். இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் விருது பெறுவதற்கு மிகவும் தகுதியானவர், பொருத்தமானவர். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விருதுக்கு தேர்வு செய்த தேர்வுக்குழுவிற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.