தமிழக நலன்களுக்கு விரோதமாக மோடி அரசு தொடர்ந்து செயல்படுகிறது - செல்வப்பெருந்தகை
Apr 5, 2025, 13:43 IST1743840815057

பல்வேறு நிலைகளில் தமிழக நலன்களுக்கு விரோதமாக மோடி அரசு செயல்படும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 46 சுங்கச் சாவடிகளில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு கூடுதலாக 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தி வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தர மறுப்பு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாராக் கடனாக ரூபாய் 16 லட்சம் கோடி தள்ளுபடி, 100 நாள் வேலை திட்டத்திற்கு தர வேண்டிய ரூபாய் 4034 கோடியை தர மறுத்து ஒன்றிய அரசு அத்திட்டத்தை முடக்குவது, கடந்த 5 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை என பல்வேறு நிலைகளில் தமிழக நலன்களுக்கு விரோதமாக மோடி அரசு செயல்படும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது என குறிப்பிட்டுள்ளார்.