நிச்சயத்திற்கு மு. க. ஸ்டாலின்; திருமணத்திற்கு விஜய்!
முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

கடந்த மார்ச் 3ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மகளின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ள வந்த முன்னாள் முதலமைச்சரின் கையை பிடித்து புன்னைகையுடன் அழைத்துச்சென்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. மேலும் அந்நிகழ்ச்சியில், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விஜய் வசந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களின் மகள் திருமணம் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய், மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். அந்தவகையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

