“ஓடு, ஓடு, ஓடு என பாடும் விஜய்தான் அரசியலை விட்டே ஓடுற காலம் வரும்..”- செல்லூர் ராஜு
வாயில் வருவதையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல, அரசியலை விட்டே நீ ஓடுற காலம் வரும் விஜய் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் உரையாற்றிய செல்லூர் ராஜூ, “விஜய் ஒரு தலைமுறையையே பாழ்படுத்தி வருகிறார். சினிமாவில் நடிக்க வாங்கிய உண்மையான ஊதியத்தை மறைத்த விஜய் யோக்கியமா? அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்தவர்கள் எல்லாம் யோக்கியர்களா? நீயே ஒரு களவாணி. MGR பற்றி பேச விஜய்க்கு என்ன யோக்கியதை இருக்கிறது. சட்டமன்றத்தை சந்தை காடாக மாற்றிவிட்டார். ஓடு, ஓடு, ஓடு என பாடும் விஜய்தான் அரசியலை விட்டு ஒட வேண்டும். கட்சியை நம்பாமல் ஓடியவர்கள் தான் ஓடுகாலி. அரசியலை விட்டே நீ ஓடுற காலம் வரும் விஜய். வாயில் வருவதையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல. சில புறாக்கள் காலைல நாகூர் தர்காவுல நெல் போடுறாங்கனு அங்க இருக்கும், மாலைல வேளாங்கண்ணில போடுறாங்கனு அங்க போயிடும்.. இந்த மணிப்புறாக்களை பத்தி கவலையே படாதீங்க” என்றார்.

