“விஜய் கட்சியினர் செய்யும் அழிச்சாட்டியத்தால் அரசியலைவிட்டு போயிடலாம்னு தோணுது”- செல்லூர் ராஜூ

 
“விஜய் கட்சியினர் செய்யும் அழிச்சாட்டியத்தால் அரசியலைவிட்டு போயிடலாம்னு தோணுது”- செல்லூர் ராஜூ “விஜய் கட்சியினர் செய்யும் அழிச்சாட்டியத்தால் அரசியலைவிட்டு போயிடலாம்னு தோணுது”- செல்லூர் ராஜூ

இளைஞர்களே நடிப்பை வைத்து ஏமாந்து விடாதீர்கள், தமிழகத்தில் யாருடைய பப்பும் வேகாது  என நடிகர் விஜய்யை செல்லூர்ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி அதிமுக  மாநகர் மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “விலைவாசி உயர்வு வீட்டு வரி உயர்வு மின் கட்டண உயர்வு எனத் தொடர்ந்து திமுக அரசு தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது.முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழக மக்களுக்கு வழங்கியவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர். மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு தேர்தலுக்காகவே திமுக ஆட்சி செய்கிறது. காவல் நிலையங்களிலே திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். போலீசை பார்த்து இன்னைக்கு ரவுடிகள் பயப்படுவதில்லை. ரவுடி, கஞ்சா விற்பவர்கள், திருடர்களை பார்த்து போலீஸ் தான் பயப்படுகிறது. ஜெ. கொண்டு வந்த மடிக்கணினி திட்டத்தை நிறுத்திய திமுக அரசு இன்று தேர்தலுக்காக மீண்டும் அதை கையில் எடுத்துள்ளது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திமுக வேரோடு அளிக்கப்பட வேண்டும்., 100 யூனிட் இலவசம்,  மிக்ஸி, கிரைண்டர் இலவசமாக கொடுத்தோம், தகுதி பார்த்து கொடுத்தோமா? 

மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது ‌அதிமுக. திமுக ஆட்சியில் கட்ட முடிந்ததா? நாங்கள் தான் ஆட்சிக்கு வந்த பின் எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்கப் போகிறோம். போதை பொருளை தடுக்க வேண்டும் நான் வைகோ நடை பயணம் செய்கிறார். ஈழத் தமிழர் பிரபாகரனுக்கு பணம் கொடுத்தது எம்ஜிஆர்.  உண்மையான விடியல்  அதிமுகவால் தான் தர முடியும். சிலர் புற்றீசல் போல் வருவார்கள், வந்தவுடன் புதிதாக ஆட்சியை கொடுத்து  விடுவோம் என்று சொல்வார்கள். அவர்களது பப்பு எல்லாம் வேகாது. யாருடைய பப்பும் வேகாது. தமிழகத்தில் ., இளைஞர்களே நடிப்பை வைத்து ஏமாந்து விடாதீர்கள்... அவர்களுக்கு கொள்கை இருக்கிறதா? நான் ஒழுங்காக இருக்கிறேன் என்றால் அது எம்ஜிஆர் கற்றுக் கொடுத்த பாடம்,  எந்த நடிகனாவது கற்றுக் கொடுத்திருக்கிறாரா? நான் அறைகூவல் விடுகிறேன் இளைஞர்கள் நல்ல நோக்கத்தோடு பாடுபட எந்த நடிகரும் சொல்லி இருக்கிறார்களா? ஒவ்வொரு வீட்டிலும் தங்களுக்கு வாக்கு உள்ளது என தவெக தலைவர் விஜய் வாயால் வடை சுடுகிறார். எத்தனை வீடுகளுக்கு சென்று விஜய் கணக்கெடுத்தார். 41 பேர் இறந்ததாக எங்காவது வரலாறு இருக்கிறதா? இறந்தவர்களை வீட்டிற்கு அழைத்து இரங்கல் தெரிவிக்கும் காட்சி உலகத்திலேயே எங்கும் கிடையாது. அரசியல் இயக்கம் தொடங்கி விட்டு அறையிலே அரசியல் செய்கிறார். அரசியலுக்கு வந்த உச்ச நடிகர் படம் நடித்தபோது நிறைய பேர் தெருவுக்கு வந்துள்ளனர். விஜய் முகத்தை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தினர் கை தட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். கமல்ஹாசன் ஊழலையும் வாரிசு அரசியலையும் ஒழிப்பேன் என்றார். உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலும் உலகநாயகனாக ஆகப்போகிறார் என நினைத்தார்கள். ஆனால் இப்ப அவருக்கே என்ன நிலைமை பார்த்திங்கள்ள... விஜய் கட்சியினர் செய்யும் அழிச்சாட்டியத்தால் அரசியலைவிட்டு போயிடலாம்னு தோணுது. விஜய் கட்சியெல்லாம் ரொம்ப நாள் இருக்காதுனு தோணுது” என்றார்.