“பாஜக மனுவுக்கு ஸ்வாகா பாடிட்டு வந்திருக்கிறோம்... ஆட்சி மாற்றம் உறுதி”- செல்லூர் ராஜூ
மதுரையில் 23ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி கட்சிகளின் மாபெரும் முதல் மாநாடு நடைபெற உள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பெயரில் கூட்டாக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்க காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பாஜக பேராசிரியர் சீனிவாசன் மற்றும் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் மனு கொடுத்துள்ளோம். வரும் 23ஆம் தேதி பாரத பிரதமர் மோடி அவர்கள் மதுரையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அதற்கு அனுமதி வாங்குவதற்காக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக பேராசிரியர் சீனிவாசன் மற்றும் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் பாஜக மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டாக வந்து காவல் ஆணையர் லோகநாதன் அவர்களிடம் மனு அளித்தனர்.5100000
பின்பு செய்தியாளர்களிடம் கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பெயரில் கூட்டாக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்க காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பாஜக பேராசிரியர் சீனிவாசன் மற்றும் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் கொடுக்கிற மனுவுக்கு ஸ்வாகா பாடிட்டு வந்திருக்கிறோம். பிரதமர் வருகை கூட்டணிக்கு உத்வேகம் கொடுக்கும் என்ற கேள்விக்கு எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ஆட்சி மாற்றம் உறுதி, பெரிய சித்திரை திருவிழா மாதிரி ஜனவரி 23 மற்றொரு சித்திரைத் திருவிழாவை காணப் போகிறீர்கள். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்பே வந்து எங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். மாபெரும் மாற்றத்தை உருவாக்கின்ற தமிழகத்தில் பெரும் புரட்சியை உருவாக்குகின்ற தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற கூட்டமாக இருக்கும். உண்மையான விடியல் 2026 இல் கழகப் பொதுச் செயலாளர் கொடுப்பார். அதற்கான முன்னோட்டம் தான் இது. 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக கூட்டணி எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து மதுரை வரும்பொழுது எங்களது பொதுச்செயலாரிடம் கேளுங்கள் அவர் பதில் சொல்லுவார் என்று பேசினார்


