கருத்துக்கணிப்பை நம்பி சோர்வடைத்து விடக்கூடாது- செல்லூர் ராஜூ

 
அதிமுகவிற்கும் குருமூர்த்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது! அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி!

நாடு முழுவதும் நாளை நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, மதுரை மக்களவை   தொகுதி  அதிமுக வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை S.S.காலனியில் உள்ள தாய் கல்யாண  மண்டபத்தில் நடைபெற்றது.

செல்லூர் ராஜு

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “வாக்கு எண்ணிக்கையின் போது  ஒவ்வொரு விநாடியும் முக்கியம். வாக்கு பதிவு இயந்திரம் உங்கள்  தொகுதிக்கானது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். வதந்திகளை நம்பாமல் செயல்பட வேண்டும். நீங்கள் மீன் குஞ்சுகள் உங்களுக்கு நீந்த கற்று கொடுக்க வேண்டுமா? மதுரை தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது. பிரச்சாரத்தின் போது மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.


தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த போது மதுரையில் நடந்த பொது கூட்டத்திற்கு  நல்ல கூட்டம் என பொது செயலாளரே பாராட்டினார். சக முன்னாள் அமைச்சர்களும் மனம் திறந்து பாராட்டினர். ஒரு தொகுதிக்கு 0.5 சதவீதம் வாக்களர்களிடம் தான் கருத்து கணிப்பு நடத்துகின்றனர். கருத்து கணிப்பை முழுவதும் நம்பி சோர்வடைத்து விட கூடாது. முகவர்கள் அனைவரும் தாமதம் இன்றி வர வேண்டும். கடைசி வரை அனைவரும் இருந்து மொத்தமாக தான் வெளியே வர வேண்டும். நமக்கு எதிராக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் முகவர்கள், விவரமாக இருப்பார்கள். நாம் அவர்களை காட்டிலும் விவரமாக இருக்க வேண்டும். ஜீரோவில் இருந்து நாம் ஆட்சியை பிடித்துள்ளோம். நமக்கு வெற்றி உறுதி”