ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு

 
tt

 அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராகுல் காந்தி வீடியோவை வெளியிட்டு , நான் பார்த்த நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என்று குறிப்பிட்டிருந்தார். . நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி இடம்பெற்றுள்ளது.  

sellur

அதிமுக தேசிய அளவில் பாஜக கூட்டணியிலும்,  இந்தியா கூட்டணியிலும் இடையாமல் தனித்து களம் கண்டுள்ளது.  இந்த சூழலில் ராகுல் காந்தியை செல்லூர் ராஜு புகழ்ந்து வீடியோ வெளியிட்டது அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறியது. அதிமுகவில் இருக்கும் செல்லூர் ராஜூ, ராகுல்காந்தியை புகழ்ந்ததால் அதிமுக தலைமை அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

rahull

இந்நிலையில் நான் பார்த்து ரசித்த இளந்தலைவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை புகழ்ந்து வெளியிட்ட பதிவை நீக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. அரசியல் ரீதியாக சர்ச்சை எழுந்த நிலையில் செல்லூர் ராஜு தனது பதிவை நீக்கினார்.