அண்ணாமலை ஒரு கூமுட்டை : செல்லூர் ராஜூ விளாசல்..!

 
1
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றொரு சுதந்திரப் போராட்டமாக நடைபெற்றது. தமிழ்மொழிக்காக நடைபெற்ற போராட்டத்தை விமர்சனம் செய்ததிலிருந்து பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குணம், தரம் தெரிகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை செருப்புக்கு சமானம். அவர் ஒரு கூமுட்டை. இந்தி படித்த ஏராளமானவர்கள் வேலை தேடி ஏன் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர் என்பது அவருக்கு தெரிய வேண்டாமா? தமிழ் படித்தவர்கள், ஆங்கிலம் படித்தவர்கள் மேலை நாடுகளில் வேலை பார்க்கிறார்கள். இஸ்ரோவில் வேலை பார்க்கிறார்கள், மருத்துவர்களாக உள்ளனர். தேர்தலுக்குப் பின்பு அதிமுக இருப்பது சந்தேகம் என பாஜ வேட்பாளர் ராம சீனிவாசன் பேசியுள்ளார். தேர்தலுக்கு பின் அண்ணாமலை, ராம சீனிவாசன் உள்ளிட்ட பாஜ தலைவர்களுக்கு இனிதான் இருக்கு, தேர்தலுக்குப் பின் ஒரு சூறாவளி அடித்தது போன்று அவர்கள் எல்லாம் தூசு போன்று மறைந்து விடுவார்கள்.

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி, தனது மனைவிக்கு நிகராக பேசியவர்தான் அண்ணாமலை. இவருடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனுக்கு மானம், ரோஷம் இருக்கா. மானம், ரோஷம் இருந்தால் அண்ணாமலை பின்னாடி போய் நின்றிருப்பாரா? ஓபிஎஸ்சுக்கு அவருடைய எண்ணம்போல பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அவர் அதிமுகவை அழிக்க நினைத்தார். தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். அவருக்கு முதல்வர் பதவி கொடுத்து அழகுபார்த்தவர் ஜெயலலிதா. இன்று அதிமுகவை ஓபிஎஸ் அழிக்க நினைக்கிறார். இவ்வாறு அவர் காட்டமாக தெரிவித்தார்.