கூடுதல் விலைக்கு மது விற்பனை- ஒருவர் கைது

 
கூடுதல் விலைக்கு மது விற்பனை- ஒருவர் கைது

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடையில் பணியாற்றிய ஊழியர் அல்லாத நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டாஸ்மாக் மதுபானக் கடையில் வெளிநபர் பணிபுரிந்தது தொடர்பாக வழக்குப்பதிவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம், பந்தநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் TASMAC மதுபான சில்லறை விற்பனைக் கடை எண்.8069-ல், கடைப் பணியாளர் அல்லாத வெளிநபர் ஒருவர் பணிபுரிந்து வருவது தொடர்பாக புகார் பெறப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில், பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரான திரு. சரத்குமார் என்பவரை கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.