பெண்களுடன் செல்ஃபி.. அரசு மருத்துவமனை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய்..!

 
1

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று (செப்.28) நடைபெறும் விழாவில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். கடந்த ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும். இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள செங்கல்பட்டு, திருப்பூர் தவிர்த்து தமிழகம் முழுவதும் நாளை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து, அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதல்வர் தரிசனம் செய்கிறார்.

மேலும் புனரமைக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இந்நிலையில், முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, காந்தி மியூசியம் பகுதியில் சாலை ஓரம் இருக்கும் மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சரை திரளான தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மருத்துவமனை உள்ளே நடந்து சென்ற முதலமைச்சரிடம் அங்கிருந்த இளம்பெண் செல்ஃபி எடுக்குமாறு கேட்டனர். உடனே அவர்களது செல்போனை வாங்கிய முதலமைச்சர் இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.