கோயிலில் திருமணம்- 4 கிராம் தாலி உடன் ரூ.60,000 மதிப்பில் சீர் வரிசை: சேகர்பாபு

 
சேகர்பாபு

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறயின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

போரூர், பெருங்குடி ஏரிகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்- சேகர்பாபு  அறிவிப்பு | Minister Shekhar Babu announced in the assembly that Borur and  Perungudi lakes will be upgraded at a ...


▪️ தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

▪️ இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனங்களுக்கு சொந்தமான நில விவரங்கள் வருவாய்த் துறையின் தமிழ் நிலம் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது .

▪️ திருக்கோவில் நிலங்களாக 4.22 லட்சம் ஏக்கர் நிலங்களும், திருமாட நிலங்களாக 0.56 லட்சம் ஏக்கரும், நன்செய் நிலங்களாக 2.04 லட்சம் ஏக்கரும், புன்செய் நிலங்களாக 2.53 லட்சம் ஏக்கரும் என சுமார் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களாக அடையாளம் காணப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

▪️ இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 22,529 கட்டிடங்களும், 75 1482 மனைகளும் பிற விவசாய நிலங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன . 

▪️ ஒரு கால பூஜைத்திட்டத்தில் பயன்பெறும் 17,000 கோயில்களில், வைப்புத்தொகை ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும். கூடுதலாக 1000 கோயில்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு அர்ச்சகர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்கப்படும்.

▪️ 2023 - 24  நிதியாண்டில் திருக்கோயிலுக்கு சொந்தமான அசையா சொத்தில் இருந்து 310.32 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கோயில் - தமிழ் விக்கிப்பீடியா

▪️ ஒரு கால பூஜைத்திட்ட கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களின் கல்விக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்

▪️ கோவை லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் செய்யப்படும்

▪️ பக்தர்களுக்கு நாள்முழுவதும் அன்னதான திட்டம் மதுரை அழகர் கோயில், மருதமலை சுப்பிரமணியசாமி கோயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்

▪️ பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதான திட்டம் தற்போது 760 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் 6 கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவு செய்யப்படும்

▪️ திருக்கோயிலில் திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின், 4 கிராம் தங்கத் தாலி உடன் ரூ.60,000 மதிப்பில் சீர் வரிசையும் வழங்கப்படும்

▪️ நிதிவசதியற்ற கோயில்களில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

▪️ 19 கோயில்களில் ரூ.32 கோடி மதிப்பில் ராஜகோபுரங்கள் அமைக்கப்படும்