BORE அடிக்காமல் இருக்க ‘சுறா’ திரைப்படத்தையா திரையிட முடியும்?- சேகர்பாபு
கடந்த தி.மு.க ஆட்சியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்த நிலையிலும், மழைநீர் தேங்காத வகையில், வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தி.மு.க கவுன்சிலர்கள் மேற்கொள்ளும் பணிகளை முடக்குவதாகவும் த.வெ.க அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, “சென்னையில் நேற்று (அக்.14) அரசு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், மக்கள் பணி குறித்து பேசியபோது BORE அடிக்கிறது என்றார் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு. அவருக்கு BORE அடிக்காமல் இருப்பதற்காக, அரசு நிகழ்ச்சியில் சுறா திரைப்படத்தையா திரையிட முடியும்? ஆதவ் அர்ஜூனா என்னும் ஆணவ அர்ஜுனா அவர்களே, 2025-ஆம் ஆண்டே SIR-ஐ எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். எங்களுக்கு மாநில உரிமைகள்தான் முக்கியம். கடந்த தி.மு.க ஆட்சியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்த நிலையிலும், மழைநீர் தேங்காத வகையில், வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.

