ஒரு அண்ணாமலை அல்ல... 100 அண்ணாமலை வந்தாலும் சந்திக்க தயார்- சேகர்பாபு

களத்தில் களமாட ஒரு நூறு அண்ணாமலை வந்தாலும் சந்திக்க திமுக தயார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 42-ஆவது நாளாக ஏழுகிணறு பகுதியில் ‘அன்னம் தரும் அமுத கரங்கள்’ நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு உணவுகளை மக்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “முதலமைச்சர் முகஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய நாள் திருநாள் என்ற தலைப்பில் 42- ஆவது நாளாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. தரமான காலை சிற்றுண்டி மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்களும் மகிழ்ச்சி நாங்களும் மகிழ்ச்சி. ஓராண்டு காலை சிற்றுண்டி திட்டம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. நியாயமான ஆட்சி இது. நீதி தேவன் ஆட்சி தன் இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தவறு இழைத்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற செயல்களால் மக்களிடம் நன்மதிப்பை தான் எங்கள் ஆட்சி பெறும்.
கரை வேட்டி கட்டியவர்கள் பொட்டு வைக்கக்கூடாது என ஆ.ராசா கூறியது அவருடைய கருத்து, எங்கள் தலைவர் அப்படி எதுவும் எங்களிடம் கூறியதில்லை. அண்ணாமலை மாற்றம் என்பது பாஜகவின் மோடி, அமித்ஷா எடுக்க வேண்டிய முடிவு. எப்படிப்பட்ட தலைவர்கள் எந்த சூழல் வந்தாலும் சந்திப்பதற்கு எங்களுடைய இயக்கத் தலைமை வழுவாக இருக்கிறது. இரும்பு மனிதர் போல முதல்வர் இருக்கின்றார். களத்தில் களமாட ஒரு அண்ணாமலை அல்ல, நூறு அண்ணாமலை வந்தாலும் சமாளிப்பதற்கு திமுக தயார். மற்ற இயக்கத்தில் ஏற்படும் குழப்பத்தில் ஆதாயம் தேட நினைப்பவர்கள், எங்கள் கட்சியின் கொள்கை கோட்பாடு இலட்சியங்கள் உழைப்பு. இதை மய்யப்படுத்தி நடைபோடுகிற இயக்கம் தான் திமுக. வெயில் காலம் தொடங்கியதால் பல கோவில்களில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.