“நாங்க வம்பு சண்டைக்கு போறதில்ல... வந்த சண்டைய விடுவதில்ல! டெபாசிட் இழப்பது உறுதி”- சேகர்பாபு

 
சேகர்பாபு

முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025இன் ஒருபகுதியாக 'பொன்னுலகு படைக்கும் தலைமை-பூபாள விடியலின் புதுமை' என்ற தலைப்பில் புரசைவாக்கம் தானா தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  கொங்கு ஈஸ்வரன் எம் எல் ஏ, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

sekarbabu

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "செயல்தான் நம்முடைய பார்முலா, பேசுவது அல்ல. ஒன்றிய அரசு திமுகவின் நல்லாட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாக்க பார்க்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையை தவிடு பொடியாக்கிடுவார் ஸ்டாலின். குயில்கள்  கூவினால் அது கேட்க இனிமையாக இருக்கும், ஆனால் அண்ணாமலை கூவினால் அது கூவத்திற்கு இணையான கூவலாகவே இருக்கும். இன்னும் அதிகமான அளவு உயரமாக பறந்து,  வேகமாக ஓடி வந்து,  நீங்கள் அடிக்கின்ற பந்தை உங்களுக்கே திருப்பி அடிக்கிற இயக்கம் திமுக என்பதை மறந்து விட வேண்டாம். எச்சிலை கூட வீதியில் துப்ப தயங்குபவன் தமிழன் , ஆனால் பான்பராக்கை கூட வீட்டுக்குள  துப்புபவன் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். 

உலகிற்கே நாகரிகத்தை வகுத்து கொடுத்த தமிழர்களுக்கு நாகரீகத்தை கற்றுத்தர வேண்டாம். திமுகவினர் வம்பு சண்டைக்கு போக மாட்டோம் , ஆனால் வந்த சண்டையை விட மாட்டோம். எதிர்த்து நிற்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை , ஏனென்றால்  வல்லபாய் படேலுக்கு நிகரான இரும்பு மனிதர் எங்களை வழிநடத்துகிறார். யாரை மிரட்டி பார்க்கிறாய் தர்மேந்திர பிரதான். இந்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தபோது ஈட்டிக்கு அல்ல ,  துப்பாக்கி ரவைக்கும் மார்பு காட்டிய கூட்டம் நாங்கள். இதற்கான விலையை பாஜக கொடுக்க வேண்டியிருக்கும். 2026 ல் பாஜக போட்டியிடும் அனைத்து இடங்களிலும் முன்வைப்புத் தொகையை இழக்கும்” என்றார்.