கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி

 
sekar babu

பொங்கல் முடிந்தவுடன் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகளை இயக்குவோம் என்று சொல்லிவிட்டு தற்போது கோயம்பேட்டிலிருந்து தான் இயக்குவோம் என்றால் என்ன அர்த்தம்?  என அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது.  145-க்கும் மேற்பட்ட ஆம்னி  பேருந்துகள் பார்க்கிங் பிரிவிலும், இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள்ளும் நிறுத்தப்பட்டன.  தென்மாவட்டம் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: பொங்கல் முடிந்தவுடன் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகளை இயக்குவோம் என்றார்கள். கோயம்பேட்டில் 1000 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளதா?  நாங்கள் கோயம்பேட்டிலிருந்து தான் இயக்குவோம் என்றால் என்ன அர்த்தம்? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்பது தவறு.  ஆம்னி பேருந்துகளுக்காக 5 நடைமேடைகள் உள்ளது. 77 பேருந்துகளை நிறுத்த முடியும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய வசதிகள் உள்ளன. ஏற்கனவே திட்டமிட்டப்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.