“பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அதிமுக..”- சேகர்பாபு விமர்சனம்

 
சேகர்பாபு சேகர்பாபு

பாஜக மற்றும் ஒன்றிய அரசிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அதிமுக, வாக்காளர் தீவிர திருத்தம் எதிரான அனைத்து கட்சி கூட்டம் குறித்த முன்னெடுப்பை குறை கூறுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல  என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு, “இந்த மாதம் 20 ஆம் தேதிக்குள் பெரியார் நகரின் முதல்வர் படைப்பகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் பயன்பாடுகள் திறந்து வைக்க உள்ளார், நூலகத்துடன் கூடிய, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி பள்ளியையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 84 மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிக பணம் செலுத்தி போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்களில் பயில முடியாத மாணவர்களுக்கு இந்த பயிற்சி மையம் மிகுந்த உதவியாக இருக்கும். கொளத்தூர் ஜெகநாதன் நகர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவதிப்படுவதற்காக  பிரத்தியேக டயாலிசிஸ் சிகிச்சை வழங்குவதற்கான இலவச சிகிச்சை மையம், மற்றும் எதிர்பாரா விதமாக கை கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கை கை மற்றும் கால் பொருத்தக்கூடிய சிகிச்சை மையம், இயன்முறை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் கொண்ட மருத்துவ மையம் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சென்னை வசதியற்ற, நடுத்தர மக்களுக்காக பல திட்டங்களை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். கொளத்தூர் தொகுதியை ஒட்டுமொத்தமாக தன்னிறைவு பெறும் தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாகத்தான் இதுபோன்ற பணிகள் நடைபெற்ற வருகிறது. SIR எதிரான அனைத்து கட்சி கூட்டம் மக்கள் திசை திருப்புவதற்காக தான் என ஜெயக்குமார் கூறுகிறார். பாஜக மற்றும் ஒன்றிய அரசுடன் அடிமை சாசனம் எழுதிக் கொண்டவர்கள் இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளை குறை கூறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை” என தெரிவித்தார்.