"சீமான் வாய்க்கொழுப்பு அடக்கப்படும்" - அமைச்சர் சேகர் பாபு
Jul 13, 2024, 11:59 IST1720852174957

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசி வரும் சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணி 80% நிறைவடைந்துள்ளது. குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்தாண்டு மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்; குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 25 ஏக்கரில் சுமார் ரூ.427 கோடியில் கட்டப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கலைஞருக்கு எதிராக சீமான் வாய்க்கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த பேச்சு தொடரும் ஆனால் சீமானின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும். சீமான் மீது புகார்கள் வந்துள்ளன, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.