தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் விஜய்- சீமான் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், அதன் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத்தளபதி விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், அதன் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும், ஏனைய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.