அன்னை அருகில் இருந்தால் எமனுக்குக்கூட நடுக்கம் வரும்- சீமான் வாழ்த்து

 
seeman

அன்னையர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில், “அன்னையர்  தின  நல்வாழ்த்துகள்!

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்! 
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!

உலகத்தில் புனிதத்திலும் புனிதமானவர் நம் அன்னையே! அன்னையை மதிக்காதவன் எவ்வளவு பெரிய அரசன் ஆனாலும் புழுவிற்கு சமமானவன். அன்னை அருகில் இருந்தால் எமனுக்குக்கூட நடுக்கம் வரும். எல்லோருடைய இடத்தையும் அன்னை வகிக்க முடியும்: ஆனால் அன்னையின் இடத்தை யாராலும் வகிக்க முடியாது!
தாய் எப்போதும் தாய் தான்! உலகில் புனிதத்திலும் புனிதமானவள் அவளே! தாயை மட்டும் கண்ணீர் சிந்தவிடாதீர்கள்! நம் தாயின் கண்ணீரை கடவுள் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறான்.

நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே! உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்! நம் அன்னையர் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகள்!”  எனக் குறிப்பிட்டுள்ளார்.