முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு சீமான் மரியாதை!

 
seeman

மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மேயர் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்த நினைவிடம் வருகின்றனர்.  


மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  போற்றுதற்குரிய பெருந்தமிழர், தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 60ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் 116ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 30.10.2023 மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.