நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த சீமான்!

 
Seeman

மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்துக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியல் எதுக்கு? இமயமலைக்கு போலாம்-பேரன் பேத்திகனு விளையாடலாமே-  ரஜினிகாந்துக்கு சீமான் நச் அட்வைஸ் | Seeman says about Rajinikanth - Tamil  Oneindia


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று நாம் தமிழர் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முதலே நாம் தமிழர் தேர்தல் அரசியலில் உள்ளது. அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் தனித்தே போட்டியிட்டுள்ளது. ஆனால் இப்போது 8 ஆண்டுகள் கழித்து நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துள்ளது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம் என்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல் என சீமான் பெருமையாக கூறியிருந்தார்.


இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.