தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சீமான்

 
stalin seeman

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 5ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது.  சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்தை பற்றி பேசியதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்தை பொருத்த வரையில் சென்று ஆட்சியிலேயே தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.கடந்த 2001ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி விட்டது.

rummy

ஆனாலும் அந்த தீர்ப்பின் மீது சட்ட ஆலோசனை கேட்டு , சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை தடை செய்யக்கோரி இந்த அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது.  வழக்கு  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . விசாரணை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.  விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலேயே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற உறுதியை பேரவைத் தலைவர் மூலமாக அதிமுக உறுப்பினருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும் இனியொருமுறை  நீதிமன்றங்கள் ரத்து செய்திட முடியாதபடி உரிய சட்ட நுணுக்கங்களுடன், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.