விஜயலட்சுமி மீதான பாலியல் புகார்- சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸ் சம்மன்

 
சீமான் மீது  நடிகை விஜயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார்!

நடிகை அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

விஜயலட்சுமி

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும்,  விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மிரட்டலின் அடிப்படையில்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெற்றது தெளிவாகியுள்ளது. அவர் மீதான பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது, 12 வாரத்துக்குள் வழக்கை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டது. 

பிரிவினை மத அரசியலை தவிர்த்திடுவோம்! – சீமான் வேண்டுகோள்

இந்நிலையில் நடிகை அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 27ஆம் தேதி 10 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.