சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் படுகாயம்- சீமான் கண்டனம்

 
குரூப் - 4 மூலம் ஆண்டுதோறும் 30,000 பணியிடங்களை நிரப்புக -  சீமான் கோரிக்கை..

கடந்த 20.08.2023 அன்று நாம் தமிழர் கட்சியின் அன்புத்தம்பி மனோஜ்குமார் இருசக்கர வாகனத்தில் பயணித்தபொழுது சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முகம் சிதைந்து படுகாயம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Image

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், அலங்கானூர் கிராமத்தில் கண்மாய் தூர்வாருதல், மடை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த முறையில் பொதுப்பணித்துறையின் கீழ் நடைபெற்று வருகின்றது. ஆனால், ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தினர் எவ்வித முன்னறிவிப்போ, எச்சரிக்கை பலகைகளோ வைக்காமல் சாலையில் பள்ளம் தோண்டி வேலைசெய்து வந்த நிலையில், கடந்த 20.08.2023 அன்று நாம் தமிழர் கட்சியின் அன்புத்தம்பி மனோஜ்குமார் இருசக்கர வாகனத்தில் பயணித்தபொழுது சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முகம் சிதைந்து படுகாயம் அடைந்துள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

சாலையின் குறுக்கே எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், எச்சரிக்கை பலகையும் வைக்காமல் அரசுத் துறையினரால் பராமரிப்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுவதும், தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து உயிர்ப் பலிகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி தோண்டிய மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து புதிய தலைமுறை ஊடகவியலாளர் உயிரிழந்ததும், மதுரையில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் ஜூடோ வீரர் காலினை இழந்ததும் அக்கொடுமைகளின் உச்சமாகும். 

விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..

அத்தகைய மரணக் குழிகள் குறித்தும், அரசுத்துறையினரின் அலட்சியம் குறித்தும் பல முறை புகாரளித்தும் அவற்றை முறைப்படுத்தி சரிசெய்ய இதுவரை எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது. அரசு மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகளின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அவை கடைப்பிடிக்கப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனத் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், அன்புத்தம்பி மனோஜ்குமார் விபத்துக்குள்ளாகக் காரணமான ஒப்பந்ததாரர் மீதும், பாதுகாப்பு வேலி, எச்சரிக்கை பலகை வைக்கச்சொல்லி உத்தரவிடாமல் அலட்சியப்போக்குடன் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், முகம் முழுவதும் சிதைந்து சிகிச்சை பெற்றுவரும் தம்பி மனோஜ்குமாருக்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.