நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க- சீமான்

 
விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..

வை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, 97வது மாநகராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி பிரதீப் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, 97வது மாநகராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி பிரதீப் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாது, கொடுந்தாக்குதல்கள் மூலம் முடக்க நினையும் வன்முறையாளர்களின் இக்கொலைவெறிச்செயல்களை எதன்பொருட்டும் அனுமதிக்க முடியாது. 

ஆகவே, இவ்விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையை ஏவிய சமூக விரோதிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமெனவும், கோவையில் தொடர்ந்து வரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், நாம் தமிழர் கட்சி உரிய எதிர்வினையாற்றுமெனவும் தமிழக அரசை எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.