பனைத் தொழிலாளர்கள் மீது கள்ளச்சாரயம் காய்ச்சுவதாகப் பொய் வழக்கு- சீமான் கண்டனம்

 
seeman seeman

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் மீது கள்ளச்சாரயம் காய்ச்சுவதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டு, தமிழ்நாடு அரசினால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman

இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் மீது கள்ளச்சாரயம் காய்ச்சுவதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டு, தமிழ்நாடு அரசினால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். உடனடியாகப் பனைத் தொழிலாளர்களை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.


விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் ஜெபராஜ் ஆகியோரை இன்றும், செஞ்சி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கடந்த வாரமும் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பனைத் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு  வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

seeman

உண்மையாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோரைத் தடுக்கவோ, டாஸ்மாக் சாராய வியாபாரத்தை நிறுத்தவோ வக்கற்ற தமிழ்நாடு அரசு, பனையேறிகளை மிரட்டிக் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி இதற்கெதிரானப் போராட்டங்களைக் கடுமையாக மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.