பாஜகவுக்கும், தமிழக ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் கொடுத்த சவுக்கடி - சீமான்..

பாஜகவுக்கும், தமிழக ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் கொடுத்த சவுக்கடி - சீமான்..

பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம்  சவுக்கடி கொடுத்துள்ளதாக நாம்  தமிழர் கட்சிட ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

பாஜகவுக்கும், தமிழக ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் கொடுத்த சவுக்கடி - சீமான்..

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது. நியாயமும், நீதியும் பக்கமிருந்தும் அரசியல் தலையீட்டாலும், அதிகார முறை கேட்டாலும் இவ்வளவு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட தம்பியின் விடுதலை இன்றைக்கு சாத்தியப்படவிருப்பது அளப்பெரும் மனமகிழ்வைத் தருகிறது.

பாஜகவுக்கும், தமிழக ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் கொடுத்த சவுக்கடி - சீமான்..

அரசியலமைப்புச் சாசனத்தைத் துளியளவும் மதியாது, கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிப்பொருளாக்கி, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்து வந்த இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடியாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இக்கூற்றைப் பார்க்கிறேன். ஆகவே, இனியும் தாமதிக்காது, 161வது சட்டப்பிரிவின்படி எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.