உயிரைக் கொடுத்து கறியை கொடுக்கிறோம்... ஆனால் எங்களுக்கு சாப்பிட வைக்கோல் உள்ளதா?- ஆடு, மாடு மாநாட்டில் சீமான் உரை
மதுரை விரகாலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆடு, மாடுகளுக்கான மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலத்திலே வாழ்ந்த மாடும் அதன் மேய்ப்பர்களும் நுழைய இன்று தடை . அதை எதிர்த்து தான் நாம் போராடுவது தான் இந்த மாநாடு. ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம். திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன்.
பால் வேண்டும், மோர் வேண்டும், வெண்ணை வேண்டும், சீஸ் வேண்டும். ஆனால் நாங்கள் போஸ்டர், பிளாஸ்டிக் போன்றவற்றை சாப்பிடுகிறோம். எல்லாத்திற்கும் எங்களின் தோல் இருக்கிறது. எங்களுக்கு சாப்பிட வைக்கோல் உள்ளதா? கேட்காமல் கொடுப்பது சிறந்த கொடை . அதைவிட சிறந்த கொடை கேட்கும் திறனற்ற உயிர்களுக்கு கொடுப்பது. நீங்கள் நாட்டிற்கு உங்கள் வரியை கொடுக்கிறீர்கள். நாங்கள் உயிரைக் கொடுத்து கறியை கொடுக்கிறோம். ஆனால் நீங்கள் எங்களுக்கான மேய்ச்சல் உரிமை மறுக்கப்படுகிறது. கால்நடைத்துறை, பால்வளத்துறை என பல துறைகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. மலைகளை வெடி வைத்து தகர்க்கும் போது ஏற்படாத பாதிப்பு, மாடு மேய்வதால் ஏற்படுமா? பழங்குடி மக்களால் தான் காடுகள் பாதுகாக்கப்படுகிறது” என பேசினார்.


