விஜய்தான் சூப்பர் ஸ்டார் - சீமான்

 
seeman

சென்னையில் நாம் தமிழர் கட்சியின், தமிழ் மீட்சி பாசறை சார்பில் தமிழ்நாள் பெருவிழா நடைபெற்றது. 

Do this if you dare': Seeman throws a big challenge on BJP! | The New Stuff


இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டமோ, பட்டயமோ, கல்வெட்டு எழுத்தோ இல்லை. இந்த தலைமுறையில் தம்பி விஜய்தான் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்க வேண்டும். அதிக வியாபாரம் வசூல் எல்லாமே விஜய்க்குதான் எதார்த்தையும் ஒத்துக்கொள்ள வேண்டும் . ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் உங்களால் ஏன் தாங்க முடியவில்லை. விஜய்தான் இன்று உயர்ந்தநிலையில் உள்ளார். அவரை சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே? விஜய் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினியே ஒத்துக்கொள்கிறார். 

இங்கே தாழ்த்தப்பட்டவர்கள்தான் இருக்கிறார்களே ஒழிய தாழ்ந்தவர்கள் இல்லை. தாழ்த்தியவர்களைத்தான் தேடி அடிக்க வேண்டியுள்ளது, இதுவரை பாராளுமன்றத் தேர்தலை 4 கட்டங்களாக நடத்திய மத்திய அரசு, மேற்கு வங்கம் ஒரு மாநிலத்தில் மட்டும் 3 கட்டங்களாக தேர்தலை நடத்திய மத்திய அரசு, ஒரே நாளில் அனைத்து சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் எப்படி தேர்தல் நடத்த முடியும்? அதை எப்படி நடத்துவார்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.