போலி மருத்துவர்களைத்தான் நீட் உருவாக்குகிறது - சீமான்

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

அரசுக்கு எதிராக எதுவும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக உயிர்ப் பயத்தைக் காட்டி சவுக்கு சங்கரை அச்சுறுத்துகிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “போலி மருத்துவர்களைத்தான் நீட் உருவாக்குகிறது. அதனால்தான் நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம். நீட் தேர்வின்போது அணிகலன்களை அகற்றச் சொல்வது என்பது எல்லாம் இங்குதான் நடக்கிறது. மூக்குத்திக்குள்ள பிட்டு இருக்கலாம்னு சொல்றதும் நீங்கதான், EVM எந்திரத்தை ஒன்னுமே பண்ணமுடியாதுன்னு சொல்றதும் நீங்கதான்.. இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் டெஸ்டிங்ஸ்  நிறுவனம் எதற்கு? வட இந்தியாவில் நீட் தேர்வு எழுத போகும் மாணவர்களை காதணி, மூக்குத்தி உள்ளிட்டவை அகற்ற சொல்வதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இது போன்று செய்கிறார்கள்.

பாடல் காப்புரிமை தொடர்பாக இளையராஜா கேட்பது நியாயமான உரிமை தான். ஒரு படைப்பாளியாக இளையராஜாவுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். படத்தை ஒருமுறை வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் உரிமத்தை வைத்துக்கொள்வது சரியல்ல. இசை, பாடல் வரிகள் இரண்டுமே முக்கியம்தான். அவற்றை பிரித்து பார்க்க கூடாது. இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள். இளையராஜா, வைரமுத்து பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. மற்றவர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டாம் என இளையராஜா சொல்லவில்லை. அவருக்கான உரிமையை தான் கேட்கிறார்” என்றார்.