“இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவேன்”- சீமான்

 
s

வரவிருக்கும் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி அளித்துள்ளார்.

அதிமுக மற்றும் திமுக ஆதரவுடன் பொது வேட்பாளராக அம்பாசமுத்திரம்  சட்டமன்றத் தொகுதியில்  சீமான் போட்டியிடுவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் சீமானின் இந்நடவடிக்கையும் இதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. திமுக மற்றும் தனது நாடார் சமூக வாக்குகளை குறிவைத்து தான் சீமான் இந்த தொகுதியில் களம் இறங்குகிறார். அவருக்கு ஆகும் தேர்தல் செலவு பொறுப்பு முழுவதையும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றுள்ள அனிதா ராதாகிருஷ்ணன் சீமானிடம் தங்களை எப்படியாவது எம்எல்ஏ ஆக்கி விடுவேன் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். அந்த நம்பிக்கையில் தான் விரைவில் சட்டசபைக்குள் செல்வேன் என்று சீமான் மேடைதோறும் பேசி வருகிறார். அவருடைய நம்பிக்கையை ஒருபுறம் இருக்க முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம் என்பது அந்தத் தொகுதியின் யதார்த்த கள நிலவரமாக உள்ளது. 


இந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வாங்கியுள்ளது. நாம் என்றால் கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்நாம் என்றால் கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் இந்த தொகுதியில் களம் இறங்குகிறார். இந்த தொகுதியில் வெற்றி பெற்று சீமான் சாதிப்பாரா இல்லை, சறுக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்