நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை

 
seeman

சென்னையில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை செய்யப்பட்டார். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் அளித்த நிலையில், சட்ட ஒழுங்கு பொதுமக்கள் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து தடையை மீறி வந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் தனியார் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் போராட்டத்தில் ஈடுபட முயலும் பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சூளை அருகே உள்ள கண்ணப்பன் திடல் சமுதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். 

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை செய்யப்பட்டார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது சீமான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.